குட் பேட் அட்லி டீசர் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ஆதிக் | லோகேஷ் பிறந்தநாளில் வெளியிட்ட கூலி புகைப்படங்கள் | நான் சினிமாவில் நீடிக்க பாக்யராஜ்தான் காரணம் : சாந்தினி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தர்ஷன் | உபாசனா நடிக்கும் 'எனை சுடும் பனி' | பிளாஷ்பேக் : பிரபு, கார்த்திக் நடிக்க மறுத்த படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : உலக போர், சென்னை மாகாணத்தை கிண்டல் செய்த படம் | ஒரு இடைவெளிக்குத் தயாராகும் தமிழ் சினிமா | 'டிராகன்' படத்தில் ஐந்து இயக்குனர்கள் | அதிக பணம் கொடுத்து தடுமாறும் ஓடிடி நிறுவனங்கள் |
மலையாள திரையுலகில் சில ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி படங்களையும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களையும் கொடுத்து முன்னணி ஹீரோவாக வளர்ந்து வருபவர் இளம் நடிகர் டொவினோ தாமஸ். கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான தள்ளுமால என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது நான்கைந்து படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் டொவினோ தாமஸ். இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் டொவினோ தாமஸ். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
கேரளாவிற்கு வருகை தந்துள்ள தோனி அங்கே உள்ள தாஜ் பீகல் ரிசார்ட்டில் தங்கி உள்ளார். அப்போது அங்கே அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார் டொவினோ தாமஸ். இருவரும் பல நிமிடங்கள் கலந்துரையாடியதாகவும் அதில் தோனியிடமிருந்து பல புதிய விஷயங்களை தான் அறிந்து கொண்டதாகவும் கூறியுள்ள டொவினோ, தோனியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் என்றும் அவர் அனைவருக்குமான ஒரு ரோல் மாடல் என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.