தாயைக் காத்த தனயன், உரியடி, பைரவா - ஞாயிறு திரைப்படங்கள் | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 |
அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை தொடர்ச்சியாக தயாரித்தவர் போனி கபூர். தற்போது வெளியாகியுள்ள துணிவு படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக போனி கபூரின் கூட்டணியில் இருந்து விலகி லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது 62 வது படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார்.
போனி கபூரின் மகனும், பாலிவுட் நடிகருமான அர்ஜுன் கபூர் தான் அளித்த ஒரு பேட்டியில், அஜித்குமார் தனக்கு பிடித்த நடிகர் என்றும், அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்றும் தான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது பான் இந்தியா படங்களாக தென்னிந்திய படங்கள் வெளியாகி வருவதால் வியாபாரம் விரிவடைந்து அதிகப்படியாக வசூலித்து வருகின்றன. இதனால் அஜித்துடன் இணைந்து நடித்தால் அவர் மூலமாக நானும் மற்ற மொழி ரசிகர்களுக்கு போய் சேருவேன். அதனால் எதிர்காலத்தில் அஜித் நடிக்கும் படங்களில் இணைவதற்கான முயற்சி எடுப்பேன் என்று தெரிவித்திருக்கிறார் அர்ஜுன் கபூர்.