டிசம்பர் 12ல் அறிவித்த படங்கள் சிக்கலின்றி வெளியாகுமா ? | தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா |

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சர்வதேச திரைப்படவிழா நடந்து வருகிறது. இந்த விழாவின் போட்டி பிரிவில் தமிழ்நாட்டில் இருந்து கார்கி, மாமனிதன், விசித்திரன், இரவின் நிழல் படங்கள் திரையிடப்பட்டது. இதில் மாமனிதன் படத்தில் நடித்த காயத்திரிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
மாமனிதன் படத்தை சீனு ராமசாமி இயக்கி இருந்தார். விஜய்சேதுபதி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கணவன் கைவிட்டுவிட்டு சென்ற நிலையிலும் தனது இரு குழந்தைகளை வளர்க்கும் தாயாக காயத்ரி நடித்திருந்தார். யுவன்சங்கர் ராஜா தயாரித்திருந்ததோடு, இளையராஜாவுடன் இணைந்து இசையும் அமைத்து இருந்தார்.