'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
2012ல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் காயத்ரி. நல்ல நடிப்பு திறமை இருந்தாலும் அதன்பின் பெரிய அளவில் இவருக்கு படங்கள் வரவில்லை. அதேசமயம் விஜய் சேதுபதியின் ஆஸ்தான நடிகையாக தொடர்ந்து அவரது படங்களில் தவறாமல் இடம்பெற்று வந்தார் காயத்ரி. குறிப்பாக இந்த பத்து வருடங்களில் விஜய்சேதுபதியுடன் இணைந்து கிட்டத்தட்ட எட்டு படங்களில் நடித்துள்ளார் காயத்ரி.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான விக்ரம் மற்றும் மாமனிதன் ஆகிய படங்களில் சோலோ கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மீண்டும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் காயத்ரி. இதைத்தொடர்ந்து தற்போது மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் ஜோடியாக நடித்து வரும் நின்ன தான் கேஸ் கொடு என்கிற படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் தான் நடித்த படங்கள் மாதத்திற்கு ஒன்றாக வெளியாகி வருவதில் உற்சாகமாகி இருக்கிறாராம் காயத்ரி. இந்த வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவாரா காயத்ரி என்பது போகப் போகத்தான் தெரியும்