'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு துருவங்கள் பதினாறு என்கிற வித்தியாசமான வெற்றி படத்தை கொடுத்து அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன். அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய நரகாசுரன் திரைப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருக்க, அடுத்தடுத்து அவர் இயக்கிய மாபியா, மாறன் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தற்போது ‛நிறங்கள் மூன்று' என்கிற படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் நரேன். அதர்வா கதாநாயகனாக நடிக்க இரண்டு முக்கிய வேடங்களில் சரத்குமார், ரகுமான் இருவரும் நடித்துள்ளனர்.
ஹைப்பர்லிங்க் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பாசிட்டிவ், நெகட்டிவ் மற்றும் கிரே என்கிற மூன்று நிறத்துக்கு சொந்தமான குணங்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் உருவாகி வருகிறது. குணச்சித்திர நடிகர் ஜெயப்பிரகாஷின் மகன் துஷ்யந்த் படத்தில் முக்கிய வேடத்தில் அறிமுகமாகிறார்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கிய படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடிவடைந்து விட்டதாக அறிவித்து உள்ளார் கார்த்திக் நரேன். விரைவில் டிரைலர் குறித்த தேதியும் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.