நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | 'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி |
இசையமைப்பாளர், நடிகர் என இருவழிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது பி.வி. சங்கர் என்ற புதுமுகம் இயக்கியுள்ள ‛கள்வன்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் இயக்குனர் பாரதிராஜாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். காடும் காடு சார்ந்த பகுதிகளில் நடக்கும் த்ரில்லர் சம்பவங்களை மையமாக கொண்ட கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. ஒரு நிமிடத்திற்கு மேல் ஓடக்கூடிய இந்த வீடியோவை நடிகர் தனுஷ் வெளியிட்டு இருக்கிறார். இப்படம் 2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கர் பச்சான் இயக்கி உள்ள கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இயக்குனர் பாரதிராஜா, இந்த கள்வன் படத்திலும் ஜி.வி .பிரகாஷ் குமாருக்கு இணையான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.