எனக்கு மரணமும் நிகழலாம் - பாலா உருக்கம் | அடம்பிடித்த சிறுமி : வீடியோ காலில் வந்து இன்ப அதிர்ச்சி தந்த விஜய் | நீச்சல் குளத்தில் போட்டோசூட் நடத்திய ஷிவானி | தங்கலான் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த விக்ரம் | மாறிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ் - சூரி | லியோ அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும்? | போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர் | எதிர்நீச்சல் தொடரில் 10 ஆண்டுகள் கூட நடிப்பேன் : மதுமிதா மகிழ்ச்சி | தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன் | 17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. பெங்காலி மொழியில் ஒளிபரப்பாகி வரும், ஸ்ரீமோகி என்ற சீரியலின் ரீமேக் தொடர் இது. இரண்டு மொழிகளிலுமே நல்ல வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.
பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாக, காதலித்த ராதிகாவை திருமணம் செய்து கொள்ளாமல், பெற்றவர்கள் நிச்சயித்த பாக்யலட்சுமியை திருமணம் செய்து கொண்டு வாழும் கோபிக்கு, மூன்று பிள்ளைகள் பிறந்து வளர்ந்த பிறகு, தன்னுடைய பழைய காதலி ராதிகாவுடன் மீண்டும் நட்பு ஏற்படுகிறது. ராதிகா கணவரை பிரிந்து வாழ்கிறவர். இவர்களின் இந்த புதிய உறவு இரண்டு குடும்பங்களுக்கு இடையே எத்தகைய பிரச்சினைகளை உருவாக்குகிறது என்பதுதான் தொடரின் கதை.
இதில் பாக்யலட்சுமியாக சுசித்ரா நடித்து வருகிறார். சதீஷ் குமார் கோபியாக நடிக்கிறார். நந்திரா ஜெனிபர், ரேஷ்மா பசுபுலட்டி உள்பட பலர் நடிக்கிறார்கள். சிவசங்கர், ஐ.டேவிட் இயக்குகிறார்கள். இந்த தொடர் 700வது எபிசோடை எட்டி உள்ளது. இதனை தொடரின் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.