பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
காக்கா முட்டை, குற்றமே தண்டனை படங்களின் கதை, திரைக்கதை எழுதியவர் ஆனந்த் அண்ணாமலை. மேலும் திரைப்படம் தொடர்பான நிறைய புத்தகங்களும் எழுதி உள்ளார். தற்போது ஆனந்த் அண்ணாமலை காகங்கள் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் ஆகியிருக்கிறார்.
இந்த படத்தில் கிஷோர், லிஜோமோல் ஜோஸ், விதார்த், குரு சோமசுந்தரம், யோகி பாபு, இளவரசு, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சரவணன் இளவரசுவின் ஒளிப்பதிவில், எம்.எஸ்.கிருஷ்ணாவின் இசையில், படம் உருவாகிறது.
படம் பற்றி ஆனந்த் அண்ணாமலை கூறியதாவது: நான் எனது நண்பர்களுடன் இணைந்து மாயவரம் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறோம். வெவ்வேறு நம்பிக்கை கொண்ட மனிதர்கள் எவ்வாறு காகங்களால் ஒரு புள்ளியில் இணைகின்றனர். ஒரு வாழ்வு எப்படி இன்னொரு வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது, இயற்கை தன் மர்மமான முறையில் எப்படி பொதுவாழ்வை உந்திச் செல்கிறது, போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் ஒளி, ஒலி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்றார்.