அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதிவ்யா. அங்கு ஹீரோயின் ஆனார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ஜீவா, வெள்ளக்கார துரை, காக்கி சட்டை, இஞ்சி இடுப்பழகி, ஈட்டி, பெங்களூரு நாட்கள். ரெமோ, மாவீரன் கிட்டு என மளமளவென நடித்தார். கடந்த 2017ம் ஆண்டு அவர் நடித்த சங்கிலி புங்கில் கதவ திற படம்தான் கடைசி படம். ஸ்ரீதிவ்யா நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களாக இருந்தது. என்றாலும் திடீரென அவருக்கு வாய்ப்புகள் நின்று போனது.
இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரெய்டு என்ற படத்தின் மூலம் திரும்பி வருகிறார். இந்த படத்தில் அவர் விக்ரம்பிரபு ஜோடியாக நடித்திருக்கிறார். ஓப்பன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்க, கார்த்தி என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். இயக்குனர் முத்தையா இந்த படத்தின் வசனத்தை எழுதி உள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார், கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.