'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா |
தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அதைத்தொடர்ந்து காக்கி சட்டை, ஈட்டி, பெங்களூர் நாட்கள், காஷ்மோரா என வருடத்திற்கு 5 படங்களுக்கு குறையாமல் நடித்து வந்த ஸ்ரீதிவ்யா, தமிழ், தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2017-க்கு பின் ஸ்ரீதிவ்யா நடித்த படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை.
இந்த நிலையில் முதன்முறையாக மலையாளத்தில் ஜனகணமன என்கிற படத்தில் நடித்துள்ளார் ஸ்ரீதிவ்யா. பிரித்விராஜ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மம்தா மோகன்தாஸ் மற்றும் முக்கிய வேடத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த வருடமே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டாலும், சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் வந்தது. இந்த நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.