3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி | கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி | எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' |

ஆமென், அங்காமலி டைரீஸ், ஈ.மா.யூ, ஜல்லிக்கட்டு, சுருளி படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ். தற்போது மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கி வருகிறார். அடுத்து அவர் மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
லிஜோ ஜோஸ் - மோகன்லால் இணையும் படத்திற்கு 'மலைக்கோட்டை வாலிபன்' என பெயரிடப்பட்டுள்ளது. இதனை மோகன்லால் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இப்பட்டத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தில் மோகன்லால் மல்யுத்த வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படமும் மலையாளம், தமிழில் தயாராகிறது. படத்தின் தலைப்பும் நண்பகல் நேரத்து மயக்கம் போன்று பக்காவான தமிழில் வைக்கப்பட்டுள்ளது.