42 வயதில் ராதிகாவால் கிடைத்த வாழ்க்கை - பாபூஸ் உருக்கம் | ரஹ்மான் எனக்கு அப்பா மாதிரி: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகினி டே | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் தெலுங்கு ‛பேபி' | லோகேஷ் கனகராஜ் அந்த விஷயத்தில் தலையிடுவதில்லை : சிலாகிக்கும் நாகார்ஜுனா | இன்னும் ஏழே நாளில் படப்பிடிப்பு முடிகிறது: 'புஷ்பா 2' விழாவில் தயாரிப்பாளர் கொடுத்த 'குட் பேட் அக்லி' அப்டேட் | ராம் சரண் 16வது பட படப்பிடிப்பு மைசூரில் துவக்கம் | அல்லு அர்ஜுனிடம் இயக்குனர் நெல்சன் வைத்த கோரிக்கை | ரிஷப் ஷெட்டியின் இரண்டாவது தெலுங்கு படம்! | பெண்கள் பாதுகாப்பு - விஜய் வெளியிட்ட அறிக்கை | பேபி ஜான் - கவர்ச்சி புயலாக உருவெடுத்த கீர்த்தி சுரேஷ் |
ரஜினிகாந்த் நடித்த ‛அண்ணாமலை, பாட்ஷா' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் ரஜினியை வைத்து இயக்கிய ‛பாபா' திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெளியானது. இவர் முதன்முறையாக கமலை வைத்து இயக்கிய ‛சத்யா' என்கிற படத்தின் மூலம்தான் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அவரை வைத்து ‛இந்திரன் சந்திரன்', கடைசியாக ‛ஆளவந்தான்' ஆகிய படங்களை இயக்கினார். சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆளவந்தான் படத்தில் தன்னிடம் ஜெயம் ரவி உதவி இயக்குனராக பணிபுரிந்த தகவலையும் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் கூறியுள்ளார் சுரேஷ் கிருஷ்ணா.
இதுபற்றி அவர் கூறும்போது, “எடிட்டர் மோகன் தனது மகன் ஜெயம் ரவியை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ளுமாறு என்னிடம் கூறினார். அந்த சமயத்தில் நான் ஆளவந்தான் படத்தை இயக்கி வந்தேன். அதில் அவரை உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டேன்.. ஆனால் சில நாட்கள் சென்ற பிறகு தான், அவர் வெறும் உதவி இயக்குனராக மட்டும் என்னிடம் சேரவில்லை.. பின்னாளில் நடிகராக வேண்டும் என்பதற்காக நடிகர் கமலின் நடிப்பை அருகில் இருந்து பார்த்து அதன் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொள்வதற்காகவே என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்துள்ளார் என தெரியவந்தது.. ஆளவந்தான் முடிந்த சில நாட்களிலேயே ஜெயம் படம் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமான நிகழ்வும் நடந்தது” என்று கூறியுள்ளார்.