நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் |
முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது தான் லட்சியம் என்பது போல ஒரு சில நடிகைகள் பயணிக்க, நடிகை வரலட்சுமி சரத்குமாரோ வித்தியாசமான கதை மற்றும் தன்னை கதையின் நாயகியாக முன்னிலைப்படுத்தும் படங்களை மட்டும் தேடித்தேடி நடித்து வருகிறார். கதாநாயகி, வில்லி என பல்வேறு பரிமாணங்களை நடிப்பில் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தமிழ், தெலுங்கில் இருமொழி படமாக உருவாகி வரும் ‛கொன்றால் பாவம்' என்கிற படத்தில் கிராமத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவி இளம் பெண்ணாக நடித்துள்ளார் வரலட்சுமி. இந்த படத்தில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். இந்த படத்தை தயாள் பத்மநாபன் என்பவர் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது இதே இயக்குனர் டைரக்ஷனில் உருவாகும் புதிய படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார் வரலட்சுமி..
ஆனால் இந்த படம் தியேட்டர்களுக்கு என இல்லாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் விதமாக உருவாகிறதாம். திரில்லர் படமாக உருவாகும் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் வரலட்சுமி. சமீபத்தில் கலகத்தலைவன் படம் மூலம் வெளிச்சம் பெற்ற பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரவ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். பெங்களூருவை கதைக்களமாக கொண்டு போலீசுக்கும், குற்றவாளிக்கும் இடையே நடைபெறும் பூனை - எலி விளையாட்டை போன்று இந்த படத்தின் கதை விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.