கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
பாகுபலி படத்தின் 2 பாகங்களின் அடுத்தடுத்த வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் பிரபாஸ். இன்னொரு பக்கம் தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலராக வலம் வரும் பிரபாஸின் திருமணம் எப்போது என்கிற கேள்விதான் அவரது ரசிகர்கள் பலருக்கும், திரையுலகை சேர்ந்த அவரது நலம் விரும்பிகளுக்கும் தலையாய கேள்வியாக உள்ளது. பாகுபலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அனுஷ்காவும் அவரும் காதலிப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியானாலும் இருவரும் அதை மறுத்து நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம் என்று இப்போது வரை கூறி வருகின்றனர்.
இடையில் தற்போது பிரபாஸுடன் ஜோடியாக நடித்துவரும் கிர்த்தி சனோன் என்பவர் அவரை காதலிக்கிறார் என்று கூட சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகையே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என மறுத்துவிட்டார். இந்த நிலையில் நடிகர் பாலகிருஷ்ணா தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் அன்ஸ்டாப்பில் என்கிற ரியாலிட்டி ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரபாஸ். வரும் சங்கராந்தி பண்டிகை சமயத்தில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபாஸிடம் அவரது திருமணம் குறித்தும், அனுஷ்கா மற்றும் கிர்த்தி சனோன் ஆகியோருடன் காதல் இருக்கிறதா என்பது குறித்தும் பாலகிருஷ்ணா சில கேள்விகளை போட்டு வாங்கியுள்ளார்.
இதில் திருமணம் குறித்த கேள்விக்கு பிரபாஸ் பதில் சொல்லும்போது சல்மான்கானுக்கு பிறகு தான் என் திருமணம் நடக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஐம்பது வயதைத் தாண்டிவிட்ட சல்மான்கான் இனி திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது. இந்த நிலையில் சல்மான்கான் திருமணம் முடிந்தால் பிறகே தனக்கு திருமணம் என பிரபாஸ் கூறியது சீரியசாகவா அல்லது தமாஷாகவா என முழு நிகழ்ச்சி வெளியாகும்போதுதான் தெரியும்.