இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
மலையாளத்தில் நேரம், பிரேமம் என இரண்டு படங்களை மட்டுமே இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இந்த இரண்டு படங்களிலேயே தென்னிந்திய சினிமாவிற்கு 4 கதாநாயகிகளை கொடுத்தவர். இரண்டாவதாக இயக்கிய பிரேமம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு 7 வருட இடைவெளி எடுத்துக்கொண்ட அல்போன்ஸ் புத்ரன் தற்போது பிருத்விராஜ், நயன்தாரா நடிப்பில் உருவான ‛கோல்ட்' படத்தை இயக்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படம் ரசிகர்களிடம் அதிக அளவில் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் கொடுப்பது போன்று விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அல்போன்ஸ் . இதுபற்றி அவர் கூறும்போது நான் பிரேமம் 2 அல்லது நேரம் 2 படங்களை இயக்கி வருகிறேன் என்று உங்களிடம் சொல்லவில்லையே. இந்த படத்தின் பெயர் கோல்டு நானும் எனது படக்குழுவினரும் நிச்சயமாக உங்கள் வெறுப்பை சம்பாதிக்கும்படியான அல்லது உங்களது மதிப்புமிக்க நேரத்தை வீணாக்கும் விதமாக படம் கொடுப்பதற்கு ஒருபோதும் முயற்சித்ததில்லை, என்னையும் கோல்டு பட குழுவினரையும் சந்தேகிக்க வேண்டாம்.
தயவுசெய்து கோல்ட் திரைப்படம் இப்படி எடுக்கப்பட்டிருந்தால் நன்றாக இருக்கும் என்பது போன்ற விமர்சனங்களை மட்டும் தயவுசெய்து பதிவிட வேண்டாம்.. உங்களில் யாருக்காவது கோல்டு படத்தை இயக்கிய அனுபவம் இருந்தால் உங்களது எதிர்மறை விமர்சனங்களை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.