ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில், ரவி மோகன், அவரது தோழியாக கூறப்படும் கெனிஷா என்பவருடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல விழாவிற்கு ஜோடியாக பங்கேற்றார். இதனையடுத்து, ரவிமோகன் - கெனிஷாவின் நெருக்கம் பற்றி ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் நீண்ட நெடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியுள்ளதாவது: என் தனிப்பட்ட விஷயங்கள் பொது மேடையில் விவாதிக்கப்படுவதைக் காணும்போது வலிக்கிறது. என் மவுனம் பலவீனம் அல்ல. அது என் வாழ்க்கைக்கான போராட்டம். ஆனால் என் நேர்மையையே கேள்விக்குள்ளாக்கும் போது, பேசாமல் இருக்க முடியாது. இது எனது வாழ்க்கை. சட்டம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, அது உண்மையை வெளிக்கொண்டு வரும். திருமண பந்தத்தை காப்பாற்ற நான் பல முயற்சிகளை மேற்கொண்டேன். ஒரு கட்டத்தில் அதனை விட்டுவிட்டேன். இது எளிதாக எடுத்த முடிவு அல்ல.
பொய் குற்றச்சாட்டுகளால் நான் அவதூறு செய்யப்படுகிறேன். என் முன்னாள் மனைவி உடனான வாழ்க்கை, நான் வீட்டில் இருந்து வெளியேறிய நாளிலேயே முடிந்தது. என் கடைசி மூச்சுவரை அப்படியே தொடரும்.
பிள்ளைகளை பார்க்க விடவில்லை
என் மனதை அதிகம் சிதைத்தது அவர்களின் லாபத்திற்காக என்னை ஒரு கருவியாக கையாண்டனர். என் பிள்ளைகளை கூட பார்க்க முடியாதபடி செய்தனர். பவுன்சர்களை கொண்டு என் குழந்தைகளை பார்க்க விடாமல் தடுக்கின்றனர். என் முன்னாள் மனைவிக்கும், என் குடும்பத்திற்கும் என்னால் முடிந்த அத்தனை ஆதரவையும் அளித்துள்ளேன். ஒருநாள் என் பிள்ளைகள் உண்மையை உணர்வார்கள். நான் என் மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்தேன்; மகன்களை அல்ல. என் வாழ்வு என் இரண்டு மகன்களுக்காகவே.
தங்க முட்டையிடும் வாத்து
5 ஆண்டுகளாக என் சொந்த பெற்றோர்களுடன் கூட உறவாட தடை விதித்தனர். என் மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தங்களுக்காக மட்டுமே அனைத்தையும் பயன்படுத்த முயற்சித்தார்கள். என்னை கணவராக பார்க்கவில்லை; தங்க முட்டையிடும் வாத்தாக பார்த்தனர்.
மவுனத்திற்கும் ஒரு எல்லை உண்டு. நான் அமைதியாகவே பிரிந்து சென்றேன். பல முறை என் பேரில் கடன் உத்தரவாதம் வைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன். இதனால் என் சொத்துகளை இழந்தேன். 10 நாட்களுக்கு முன்புகூட, அவரது தாயார் என்னை கடன் உத்தரவாதம் அளிக்கும்படி மீண்டும் கட்டாயப்படுத்தினார். இது தான் அவர்களது நிஜ முகம்.
உண்மையற்ற கிசுகிசு
பீனிக்ஸ் பறவை போல மறுபடியும் எழுவேன். என் முன்னாள் மனைவியும், அவருடைய வழிகாட்டிகளும் சுயலாபத்துக்காக என்னையும், என் பிள்ளைகளையும் தவறாக சித்தரித்து, நிதி விவகாரங்களில் ஆட்படுத்தும் நோக்கில், தவறான தகவல்களைப் பரப்பி, என் சொத்துக்களில் பாதியை இழக்க செய்தனர். என்னை சில நடிகைகளுடன் தவறாக இணைத்து உண்மையற்ற கிசுகிசு செய்திகளை பரப்பினர்.
நீதி என்றால் நீதிமன்றங்களில் தேடப்பட வேண்டும், சமூக ஊடகங்களில் அல்ல. ஆனால், சிலர் தங்களை பிரபலமாக வைத்திருக்க அல்லது பிரபலத்துடன் வாழும் நோக்கில், சர்ச்சைகளை மட்டுமே வாழ்வாதாரமாக பயன்படுத்துகிறார்கள். என் முன்னாள் மனைவியின் செல்வமிக்க குடும்பம், என் வாழ்க்கையை முழுமையாகக் கட்டுப்படுத்தி வந்தார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.