நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் மீண்டும் இணையும் விஜய்யின் 67வது படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால், இதுவரையிலும் பூஜை புகைப்படங்களை படக்குழு வெளியிடவில்லை. அவ்வளவு ரகசியமாக அவற்றை வைக்க வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை.
விஜய்யின் 'வாரிசு' படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் விஜய்யின் அடுத்த பட அறிவிப்பைப் பற்றித் தெரிந்து கொள்ள அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். 'வாரிசு' படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற அடுத்த சில மணி நேரங்களில் பூஜை புகைப்படங்களை வெளியிட்டனர்.
ஆனால், விஜய் 67 படத்தின் பூஜை புகைப்படங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகியவற்றை பட நிறுவனமோ இயக்குனர் லோகேஷ், இதுவரை அறிவிக்காதது ஆச்சரியமாக உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதுதான் ஒரு நடிகரின் கடமை. தனக்கென பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் விஜய், அடுத்த பட விஷயத்தில் இவ்வளவு ரகசியம் காக்க வேண்டிய அவசியம் குறித்து சில தகவல்களும் வெளியாகி உள்ளன.
விஜய் 67 படம் சம்பந்தமான அதிகாரப்பூர்வமற்ற முறையில் எந்த ஒரு புகைப்படம் வெளியானாலும் அதை வெளியிடுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க தனியாக ஒரு ஏஜென்சியை நியமித்துள்ளார்களாம். அதை பூஜையிலிருந்தே ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.