லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கிய படம் லவ் டுடே. அவரே நாயகனாகவும் நடித்திருந்தார். இவானா நாயகி. சத்யராஜ், யோகிபாபு, ராதிகா உள்பட பலர் நடித்திருந்தார்கள். காதலர்கள் தங்கள் செல்போனை மாற்றிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதை காமெடியாக சொன்ன படம். இது எல்லா இளைஞர்களோடும் கனெக்ட் ஆனதால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
வசூலிலும் சாதனை படைத்துள்ளது. தற்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கு 300 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. அங்கும் படம் வரவேற்பை பெற்றுள்ளது. 5 கோடியில் எடுக்கப்பட்ட படம் முழுமையாக 100 கோடி வசூலிக்கும் என்கிறார்கள். கடந்த 4ம் தேதி வெளியான படம் இன்று 25வது நாளை தொட்டிருக்கிறது.
சென்னையில் மட்டும் 39 தியேட்டர்களில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 150 தியேட்டர்களுக்கும் மேலாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது. பெரிய நட்சத்திரங்களின் படங்களே 25வது நாளை தொட தடுமாறும்போது இளம் இயக்குனர் நடித்து, இயக்கி படம் இவ்வளவு பெரிய வரவேற்பை பெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.