குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் சாய் பல்லவி. தமிழை விட தெலுங்கு, மலையாளத்தில் அவருக்கு சிறந்த படங்களும், கதாபாத்திரங்களும் கிடைத்துள்ளன. தமிழில் அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க உள்ளார் சாய் பல்லவி. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
வேறு எந்த மொழிகளிலும் புதிய படங்களை சாய் பல்லவி ஒத்துக் கொள்ளாமல் இருக்கிறார். தனது சொந்த ஊரான கோயம்பத்தூரில் சாய் பல்லவி மருத்துவமனை ஒன்றைக் கட்ட உள்ளதாக டோலிவுட்டில் செய்தி பரவி வருகிறது. ஜார்ஜியா நாட்டில் டாக்டருக்குப் படித்து முடித்தவர் சாய் பல்லவி. அங்கு படித்துக் கொண்டிருக்கும் போதுதான் மலையாளப் படமான 'பிரேமம்' படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
டாக்டருக்குப் படித்து முடித்துவிட்டு இன்னும் அதற்கான பணியில் இறங்காமல் இருப்பது குறித்து சாய் பல்லவி யோசித்து வந்தாராம். எனவே, சொந்த ஊரில் மருத்துவமனை கட்டி அங்கு தனது டாக்டர் பணியை ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. நடித்துக் கொண்டே அந்த பணியையும் பார்ப்பாரா அல்லது சில வருடங்களில் நடிப்பை விட்டு விலகுவாரா என்பது இனிமேல்தான் தெரியும் என்கிறார்கள்.