'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' |
'பரியேறும் பெருமாள், கர்ணன்' படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கி வரும் படம் 'மாமன்னன்'. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க மலையாள நடிகர் பகத் பாசில், நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. நேற்று உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு 'மாமன்னன்' படக்கழு ஏஆர் ரஹ்மானின் வாழ்த்து வீடியோவுடன் படத்தின் சிறு முன்னோட்டம் ஒன்றையும் வெளியிட்டது.
அந்த வீடியோவின் இறுதியில் படத்தின் நட்சத்திரங்கள், டெக்னீஷியன் அடங்கிய போஸ்டரில் வடிவேலு பெயரைத்தான் முதலில் போட்டிருக்கிறார்கள். அவருக்கு அடுத்து பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் பெயர்களைப் போட்டுவிட்டு கடைசியாகத்தான் உதயநிதி ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பொதுவாக எந்த ஒரு படத்தின் டைட்டில் சம்பந்தப்பட்ட போஸ்டர்களிலும் கதாநாயகன் பெயரைத்தான் முதலில் போடுவார்கள். அப்படியிருக்க இந்தப் படத்தின் போஸ்டரில் அவருடைய பெயரைக் கடைசியில் போட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.