மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில், கமல்ஹாசன், அமலா, டினு ஆனந்த் மற்றும் பலர் நடிப்பில் 1987ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி வெளிவந்த படம் 'பேசும் படம்'. படத்தின் பெயர்தான் 'பேசும் படம்', ஆனால், படமோ பேசாத படமாகத்தான் வெளிவந்தது. படத்தில் வசனக் காட்சிகளே கிடையாது. இந்தியா முழுவதும் அப்போதே படத்தை பான் இந்தியா படமாக வெளியிட்டிருந்தார்கள்.
தமிழகத்தில் 'பேசும் படம்', வட மாநிலங்களில் 'புஷ்பக்', கேரளா, ஆந்திராவில் 'புஷ்பக விமானம்', கர்நாடகாவில் 'புஷ்பக விமானா' என்ற பெயர்களில் வெளியானது. ஆனால், அந்த ஆண்டிற்காக வழங்கப்பட்ட 35வது தேசிய திரைப்பட விருதுகளில் கன்னட சினிமாவாக எடுத்துக் கொள்ளப்பட்டு, முழு பொழுதுபோக்கு படமாக அமைந்ததற்கான தேசிய விருது இந்தப் படத்திற்கு வழங்கப்பட்டது.
நேற்றுடன் இந்தப் படம் வெளிவந்து 35து ஆண்டுகள் ஆனதையொட்டி படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன், ““என்னுடைய இயக்குனர்களிலேயே இளமையானவர் சிங்கீதம் சீனிவாசராவ்தான். நாங்கள் உருவாக்கிய 'புஷ்பக்' இப்போது எங்களை விட மூத்துவிட்டது. அதற்கு 35 வயதாகிறது. சிங்கீதம் சார்... நாம் நமது கலையை மூப்படைய விடாதிருப்போம் சார்...” இதற்கும் நீங்கள் களுக்கென்று சிரிப்பீர்கள். அந்தச்சிரிப்புதான் இன்றும் எனக்குப் பிரியமான இசை,” என படத்தைப் பற்றி டுவிட்டரில் நினைவு கூர்ந்துள்ளார்.