Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதுப்பொலிவுடன் மீண்டும் வருகிறார் ‛பாபா'

21 நவ, 2022 - 15:23 IST
எழுத்தின் அளவு:
Baba-movie-releasing-again-with-Digital-version

2002ல் நடிகர் ரஜினிகாந்த் நடித்து, தயாரித்த படம் ‛பாபா'. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் அப்போது வரவேற்பை பெறவில்லை. ரஜினியின் கேரியரில் கடும் நஷ்டத்தை இந்த படம் தந்தது. அதேசமயம் இந்தபடம் வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப்படத்தில் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது.



இந்த நிலையில் தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளதால் மீண்டும் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு தரஉள்ளது. படத்திற்கான சிறப்பு சப்தங்களும் கூட இன்னும் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளன.

விரைவில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
பவர் ரேஞ்சர்ஸ் புகழ் நடிகர் மரணம் : தற்கொலை என தகவல்பவர் ரேஞ்சர்ஸ் புகழ் நடிகர் மரணம் : ... சிம்புவின் பத்து  தல படத்தின் ரிலீஸ் தள்ளி போனது சிம்புவின் பத்து தல படத்தின் ரிலீஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

chakra - plano,யூ.எஸ்.ஏ
22 நவ, 2022 - 06:42 Report Abuse
chakra கிழட்டு மூஞ்சிக்கு நூறு கோடியா
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
22 நவ, 2022 - 06:41 Report Abuse
chakra சூடு சொரணை இருந்தால் நடிக்க வருவார்களா நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
Rate this:
thangam - bangalore,இந்தியா
21 நவ, 2022 - 21:04 Report Abuse
thangam நல்ல படம். நமது முட்டாள் மக்களுக்கு அலும்மா டோளும்மா தானே பிடிக்கும்? ஒரே ஒரு மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் ஏறி மொத்த தமிழ்நாட்டையும் கொள்ளை அடிக்க கும்பலுக்கு இந்த முட்டாள் மக்களை நம்பிதானே.
Rate this:
V GOPALAN - chennai,இந்தியா
21 நவ, 2022 - 20:56 Report Abuse
V GOPALAN He is nearing 75 still want to dance with all actress. Sivasankar Baba must have been his Guru.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
22 நவ, 2022 - 07:03Report Abuse
vadiveluWhat is wrong in it? Senseless opinion. Dancing is not shameful thing. Take care of your family, dont poke your nose on popular persons. Shame on you...
Rate this:
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
21 நவ, 2022 - 16:01 Report Abuse
Venkat good movie...good music by AR Rahman...it has to be released and this should be a hit this time.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in