அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
ஹரி இயக்கிய யானை படத்தை அடுத்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய். இந்த நிலையில் நேற்று அவர் தனது 45வது பிறந்த நாளை சென்னையில் உள்ள உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அதோடு அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கியதோடு தானும் மதிய உணவை அந்த குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார் அருண் விஜய்.
மேலும் நேற்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த தானமும் செய்திருக்கிறார் அருண் விஜய். அவர் மட்டுமின்றி அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்ததானம் செய்துள்ளார்கள். ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து அருண் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.