சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

நடிகர் தனுஷ் தனது 42வது பிறந்தநாளை சென்னையில் நேற்று கொண்டாடினார். இந்தமுறை சென்னையில் இருந்ததால் அவர் பிறந்தநாள் கொண்டாடங்கள் களை கட்டி இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே தனுஷ் உடன் போட்டோ எடுக்க வேண்டும். மற்ற, ஹீரோக்கள் தங்கள் ரசிகர்களுடன் போட்டோ எடுத்து வருகிறார்கள். எங்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பீல் பண்ண, பிறந்தநாளுக்கு முதல் நாள் ரசிகர்களுக்கு சைவ, அசைவ விருந்து அளித்து இருக்கிறார்.
தனுஷ் உடன் போட்டோ எடுத்து விருந்து சாப்பிட்ட ரசிகர்கள் செம ஹேப்பி. தவிர, பிறந்தநாள் அன்று, தனது போயஸ்கார்டன் வீட்டுவாசலுக்கு வந்து வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுடன் போட்டோ எடுத்து இருக்கிறார். அப்போது, பல்வேறு ஊர்களில் இருந்து வந்த ரசிகர்கள் தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் வட சென்னை படம் ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதில் தனுஷ் ரசிகர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார் வெற்றிமாறன். அவர் பிறந்த நாளை முன்னிட்டு இட்லி கடை படத்தில் இருந்து என்ன சுகம் பாடல் வெளியாகி இருக்கிறது. அதேசமயம் அவர் நடிப்பதாக இருந்த இளையராஜா பயோபிக் குறித்து எந்த தகவலும் இல்லை. அந்த படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரனும் வேறு படத்துக்கு போவதால், படம் டிராப்பா? தள்ளிப்போகுதா என இளையராஜா ரசிகர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.