தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை | பிளாக்பஸ்டர் படம் எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் இல்லை : லிஜோ ஜோஸ் பெல்லிசேரி | தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வியந்த ஹாலிவுட் நடிகர் | திரைப்பட எழுத்தாளர் வேலுமணி காலமானார் | ஏழைகளுக்கும் போட் விடுங்கள் : அஜித்தின் உதவியை விமர்சித்த போஸ் வெங்கட் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வருபவர் தமன்னா. தற்போது தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். தெலுங்கு, ஹிந்தியில் தலா ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கிலும், மலையாளத்திலும் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாக தமன்னா, பிசினஸ்மேன் ஒருவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக செய்திகள் பரவியது.
தமன்னாவுடன் சம காலத்தில் முன்னணி கதாநாயகிகளாக இருந்தவர்கள் ஒவ்வொருவராக திருமணம் செய்து வருவதால் யாரோ தமன்னாவைப் பற்றியும் இப்படி ஒரு செய்தியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. அவற்றிற்கு பதிலளிக்கும் விதமான தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில், “என்னுடைய பிசினஸ்மேன் கணவரை அறிமுகப்படுத்துகிறேன்,” என 'எப் 3' என்ற தெலுங்குப் படத்தில் அவர் ஆண் தோற்றத்தில் நடித்த ஒரு குட்டி வீடியோவைப் பதிவிட்டு, “திருமண வதந்திகள், எனது வாழ்க்கையைப் பற்றி கதை எழுதும் ஒவ்வொருவருக்கும்,” என ஆங்கிலத்தில் குறிப்பிட்டு ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார். அந்த ஆண் தோற்ற வீடியோவிற்கு முன்னதாக கவர்ச்சியான விதத்தில் புடவை அணிந்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.