பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கதர் ஆடைகளை விற்பனை செய்யும், ஹவுஸ் ஆப் கதர் என்ற கதர் ஆடை நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக அறிவித்த கமலஹாசன், நெசவுத் தொழிலாளர்களின் வறுமையை போக்கும் விதமாக கதர் ஆடைகளுக்கான இந்த பிராண்டை தான் ஆரம்பித்ததாகவும் தெரிவித்தார். அந்த வகையில் வியாபாரமாக மட்டுமின்றி உலக அளவில் கைத்தறி ஆடைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அந்நிறுவனத்தை தொடங்குவதாகவும் அறிவித்திருந்தார் கமல்.
சர்வதேச டிசைனர்களை உள்ளடக்கிய இந்த நிறுவனம் குறித்த ஒரு விளம்பரத்தில் மாடல் அழகியுடன் இணைந்து நடித்துள்ளார் கமல்ஹாசன். அதில், தாடி மீசை கெட்டப்பில் கூலிங் கிளாஸ் அணிந்து காணப்படுகிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படங்களை பார்க்கும்போது கதர் ஆடைகளை வயதானவர்தான் அணிய வேண்டும் என்று அனைவரும் கருதி வரும் நிலையை மாற்றி, இளைஞர்களும் இதை அணிந்து கொள்ளலாம் என்று ஆர்வத்தை தூண்டு வகையில் இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன.