ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் |
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. நாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். தில் ராஜுவின் தயாரிக்க சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், யோகி பாபு, சங்கீதா, குஷ்பு, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசுத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்தப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடல் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று ஹிட்டானது . இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். தமன் இசையமைத்திருக்கிறார். பொதுவாக விஜயின் படங்கள் வெளியாகிறது என்றாலே இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். காரணம் விஜய் பேசும் பேச்சு. 'பீஸ்ட்' படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில் 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டுவிழா எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.