''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது உதயநிதியை வைத்து மாரி செல்வராஜ் இயக்கி வரும் படம் மாமன்னன். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, வடிவேலு முக்கிய கதாபாத்திரத்திலும், பஹத் பசில் வில்லனாகவும் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்று படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான உதயநிதி தனது கலகத்தலைவன் பட இசை வெளியீட்டு விழா மேடையில் ஓப்பனாக அதேசமயம் ஜாலியாக ஒரு தகவலை வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார்.
இதுபற்றி அவர் பேசும்போது, “கலகத்தலைவன் படமே 2019ல் துவங்கி இப்போதுதான் ஒருவழியாக ரிலீசாகிறது. இந்த படத்திற்கு ரிலீஸ் தேதியை அறிவிப்பதற்கு முன்புவரை போஸ்ட் புரடொக்ஷன் பணியில் அமர்ந்து இந்த படத்தை ஒவ்வொரு பிரேமாக செதுக்கிக் கொண்டிருந்தார் இயக்குனர் மகிழ்திருமேனி.. ரிலீஸ் தேதியை அறிவித்ததும் தான் படத்தை முடித்தார். இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 70 நாட்கள் என்னிடம் வேலை வாங்கி விட்டார்.. இவரே பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்திற்காக என்னை 130 நாட்கள் வைத்து செய்துவிட்டார். மாமன்னன் படப்பிடிப்பு முடிந்தது என்று எல்லோரும் சொல்கிறார்கள். இன்னும் முடியவில்லை.. எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் என்னை இரண்டு நாட்கள் அழைத்து இன்னும் படப்பிடிப்பு நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்” என்று இரண்டு இயக்குனர்களையும் ஜாலியாக கலாய்த்தார் உதயநிதி.
இதில் இயக்குனர் மகிழ்திருமேனி மட்டும் உதயநிதி பேசும்போது எழுந்துவந்து குறுக்கிட்டு, “இந்த படம் துவங்கியதும் இடையில் இரண்டு முறை கொரோனா வந்து சென்றது. அதன்பிறகு இவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்று விட்டார். கதாநாயகியை தேர்வு செய்வதற்கே மூன்று மாதம் ஆனது. எந்த கதாநாயகியும் இவருக்கு பிடிக்கவில்லை.. கடைசியாக நிதி அகர்வால் வந்ததும்தான் ஒரு வழியாக ஒப்புக்கொண்டார்” என்று பதிலுக்கு கலாய்க்க அதை உதயநிதியும் ஜாலியாக எடுத்துக் கொண்டார்.