சித்தார்த் கைவசம் 8 புதிய படங்கள் | ‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு | பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. சுகுமார் இயக்கிய இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்து இருந்தார். இப்படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
'புஸ்பா- தி ரூல்' என தலைப்பு வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக தாமதமாகி வந்தன. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க படக்குழு முடிவு செய்ததாலும், திரைக்கதை இன்னும் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த தாமதம் என்கிறார்கள்.
இந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தின் பாங்காக் பகுதியில் அடுத்த வாரம் துவங்க உள்ளதாம். பாங்காக்கை சுற்றியுள்ள அடர்ந்த காட்டு பகுதியில் படத்தின் படப்பிடிப்பு மூன்று வாரங்களுக்கு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.