‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
நடிகர் ராமராஜன் பல ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ராமராஜனின் 45வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு 'சாமானியன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அவருடன் ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ராகேஷ் இயக்குகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ராமராஜன் ஏராளமான படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்துள்ளன. தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.