காமெடி நடிகராக அறிமுகமாகி பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. பின்னர் எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் ஆகிய படங்களில் நாயகனாகவும், இரண்டு படங்களில் இயக்குனராகவும் உயர்ந்தார். வீட்ல விஷேசம் படத்திற்கு பின் ‛சிங்கப்பூர் சலூன்' என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதை ரவுத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களின் இயக்குனர் கோகுல் இயக்குகிறார்.
இதில் சலூன் கடைக்காரராக பாலாஜி நடிக்கிறார். நாயகியாக ஷிவானி ராஜசேகர் நடிப்பார் என தெரிகிறது. வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது. அடுத்தாண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட உள்ளனர்.