
டிரைவர் ஜமுனா ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு
இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டள்ள அறிக்கை : ‛‛நவ., 11ம் தேதியன்று வெளியாவதாக இருந்த எங்கள் டிரைவர் ஜமுனா படத்தின் வெளியீட்டு தேதி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. தாமதத்திற்கு வருந்துகிறோம். மிக விரைவில் படத்தை உங்களின் பார்வைக்கு கொண்டு வர இருக்கிறோம். புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். தங்களின் மேலா ஆதரவிற்கும், அன்பிற்கும் தலை வணங்குகிறோம்"".
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தவாரம் வெளிவந்த படங்களில் ‛லவ் டுடே, நித்தம் ஒரு வானம்" படங்களுக்கு வரவேற்பு இருப்பதால் இந்தவாரமும் அந்த படங்கள் தியேட்டர்களில் தொடருகின்றன. நாளை ‛மிரள், யசோதா, பரோல்" ஆகிய படங்களுடன் ‛டிரைவர் ஜமுனா" படமும் வெளி வருவதாக இருந்தது. ஆனால் குறைந்த அளவிலான தியேட்டர்களே கிடைத்ததால் டிரைவர் ஜமுனா படத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!