கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

இயக்குனர் சற்குணம் - நடிகர் அதர்வா நடிக்கும் படத்திற்கு ‛பட்டத்து அரசன்' என பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
‛‛களவாணி, வாகை சூடவா, களவாணி 2, சண்டிவீரன்'' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சற்குணம். நடிகர் அதர்வாவை வைத்து ஏற்கனவே சண்டிவீரன் படத்தை இயக்கினார். அதையடுத்து மீண்டும் அவரை வைத்து ஒரு படத்தை இயக்கி வந்தார். கிராமத்து கதைக்களத்தில் உருவாகி வந்த இந்த படத்தில் நடிகர் ராஜ்கிரணும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
பெயர் வைக்காமலேயே இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது இந்த படத்திற்கு ‛பட்டத்து அரசன்' என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் கிராமத்து லுக்கில் அதர்வாவும், ராஜ்கிரணும் நடந்து வருவது போன்று அமகை்கப்பட்டுள்ளது. லைக்கா தயாரிக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.