'கல்கி 2898 ஏடி' படப்பிடிப்பில் கமல்ஹாசன் | சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் | அஜித் எடுத்த அதிரடி முடிவு | மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி | ஓடிடி ரிலீஸ் : ஹிந்தி சினிமாவை பின்பற்றுமா தமிழ் சினிமா ? | மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு | அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல் | ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை' | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து : 'கமா' போட்ட சசிகுமார் | ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்? |
மலையாள திரையுலகில் நடிகர் திலீப் தற்போது பாந்த்ரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதன்முதலாக தமன்னா அவருக்கு ஜோடியாக இணைந்து நடித்து வருகிறார். இது தவிர இன்னும் சில படங்களில் பிஸியாக இருக்கும் திலீப், இதற்கிடையில் தனது தம்பி அனூப் பத்மநாபனை தான் தயாரிக்கும் தட்டசேரி கூட்டம் என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தியுள்ளார். திலீப்புடன் பல படங்களில் காமெடி நடிகராக இணைந்து நடித்த ஹரிஸ்ரீ அசோகனின் மகன் அர்ஜுன் அசோகன் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்
நாளை (நவ-11) இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய திலீப், “என் தம்பிக்கு நடிக்கும் ஆர்வம் இல்லை என்பது ஆச்சரியம் தான். அதேசமயம் வீட்டில் குழந்தைகளிடம் கூட கதைசொல்லி பழக்கமில்லாத அவர் டைரக்ஷனில் இறங்கப் போகிறேன் என்று சொன்னபோதும் எனக்கு ஆச்சரியம் தான். ஆனால் அவர் இந்த கதையுடன் என்னை அணுகியபோது இந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்று கூறி முழு சுமையையும் என் மீது ஏற்றுக்கொண்டேன்.
இந்த படத்தை துவங்கியதுமே என் தம்பி செய்த முதல் வேலை தனியாக ஒரு வீடு பார்த்ததுதான். ஏனென்றால் படம் வெளியாகி ஏதாவது நெகட்டிவ் ஆக ரிசல்ட் வந்தால் என்னுடைய வீட்டிற்கு வரத் தேவையில்லை பாருங்கள்.. ஆனால் நான் படத்தை பார்த்துவிட்டேன். அந்த மாதிரி எதுவும் நடக்காது.. ஒரு பொழுதுபோக்கு படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கின்றன.
என் தம்பி சிறுவயதாக இருக்கும்போதே எங்களுடைய தந்தை இறந்து விட்டதால் அவருக்கு அண்ணனாக மட்டுமல்ல தந்தையாகவும் இருந்து தான் அவரை கவனித்து வருகிறேன். அவரது இயக்குனர் கனவை நிறைவேற்றும் பொறுப்பு எனக்கு இருந்தது. அதை நிறைவேற்றி விட்டேன் என்கிற மன நிறைவும் தற்போது உள்ளது” என்று கூறினார் திலீப்.
இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன் திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியரும் தனது தம்பி மது வாரியரை லலிதம் சுந்தரம் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தி அந்தப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.