ஜனாதிபதியை சந்தித்த சமந்தா | ராமர் வேடத்தில் நடித்த பிரபாஸுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் | வட சென்னை 2 : சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட் | பிடித்தமான பாடலுக்கு நடனமாடுவது ரொம்ப பிடிக்கும் - தமன்னா | மகன்களுடன் முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் | கவனம் ஈர்க்கும் 'தூமம்' டிரைய்லர் | பகவந்த் கேசரி பராக்: பாலய்யாவின் அடுத்த அதிரடி | விஜய் சேதுபதி படப்பிடிப்பை பார்க்க திரளும் மலேசிய மக்கள்: படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் | ஜூனியர் என்டிஆர் படத்தில் பிரியங்கா சோப்ரா? | பதிரனாவுடன் காதலா? விளக்கமளித்த பாக்கியலெட்சுமி நடிகை |
மலையாள திரையுலகில் பஹத் பாசில், துல்கர் சல்மான், வினீத் சீனிவாசன் ஆகியோரை தொடர்ந்து வாரிசு நடிகராக அறிமுகமானவர் மோகன்லாலின் மகன் பிரணவ். இயக்குனராகும் ஆசையில் பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், ஒருகட்டத்தில் திசைமாறி, கதாநாயகனாக நுழைந்து படங்களில் நடித்து வருகிறார். இதுவரை மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஹிருதயம் படத்தின் மூலம் இரண்டாவது வெற்றியை ருசித்தார்.
அதேசமயம் துல்கர் சல்மான், பஹத் பாசில் ஆகியோர் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து படங்களிலாவது நடித்து தங்களை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இவரோ ஹிட் படம் கொடுத்தாலும் கூட அடுத்த படத்தில் நடிப்பது குறித்து எந்த யோசனையும் இல்லாமல் ஜாலியாக யாத்திரை கிளம்பி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவ்வளவு ஏன் இவரது முதல் படமான ஆதி ரிலீசான தேதியில், இவரோ இமயமலைப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார்.
இந்தநிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் இவர் யாத்திரை மேற்கொண்டு இருப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் வினித் சீனிவாசன். அதுமட்டுமல்ல ஐரோப்பாவில் உள்ள இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள 800 கிலோ மீட்டர் தூரத்தை இவர் நடந்தே பயணித்து கடந்ததாகவும் ஒரு ஆச்சரிய தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார் அந்தவகையில் இளம் ஹீரோக்களில் பிரணவ் மோகன்லால் சற்றே வித்தியாசமானவர் என்று தான் தெரிகிறது.