மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

மலையாள நடிகர் திலீப் தற்போது தான் நடித்து வரும் ஒவ்வொரு படமாக படப்பிடிப்பை முடித்து வருகிறார். அந்த வகையில் வாய்ஸ் ஆப் சத்யநாதன் என்கிற படம் அவரது அடுத்த படமாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து அவரது 147வது படமாக பாந்த்ரா படம் உருவாகி வருகிறது. திலீப்பை வைத்து ஏற்கனவே ராம்லீலா என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அருண்கோபி இந்த படத்தை இயக்குகிறார். நடிகை தமன்னா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பதை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு ஏற்கனவே 2018ல் தான் அறிவித்து, சில நாட்கள் படப்பிடிப்பும் நடத்தப்பட்ட பறக்கும் பப்பன் என்கிற படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு நடிகர் திலீப் திட்டமிட்டுள்ளாராம். அறிமுக இயக்குனர் வியன் விஷ்ணு என்பவர்தான் இந்த படத்தை இயக்குகிறார். ஒரு சாதாரண கிராமத்து மனிதனுக்கு பறக்கும் சக்தி கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதை மையப்படுத்தி பேன்டஸி படமாக இந்த படத்தின் கதை உருவாகியுள்ளது. இந்த படம் உருவாகி வந்த சமயத்தில் தான் திலீப் சிறைக்கு செல்ல நேர்ந்தது. அதனால் இந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஆனாலும் இந்த படம் நிச்சயம் உருவாகும் என திலீப் அவ்வப்போது கூறி வந்தார்.
இந்த நிலையில் கடந்த வருடம் இதே சூப்பர்மேன் கதையம்சத்துடன் மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அதற்கு முன்னதாகவே அதுபோன்ற அம்சத்துடன் அறிவிக்கப்பட்ட தனது பறக்கும் பப்பன் படத்தை நிச்சயம் திரைக்கு கொண்டுவந்து தீருவது என முடிவு செய்துள்ளாராம் திலீப். தற்போது நடித்து வரும் பாந்த்ரா படத்தை முடித்துவிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது.