கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா |

கடந்த 2016ல் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான புலிமுருகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று மலையாள சினிமாவில் 100 கோடி வசூல் இலக்கை எட்டிய முதல் படம் என்கிற பெருமையையும் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வைசாக் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மம்முட்டியை வைத்து அவர் இயக்கிய மதுர ராஜா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. தற்போது மோகன்லாலை வைத்து வைசாக் இயக்கியுள்ள மான்ஸ்டர் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் அடுத்ததாக பிரித்விராஜை வைத்து படம் இயக்குகிறார் வைசாக். இந்த படத்திற்கு கலிபா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரித்விராஜின் பிறந்தநாளான நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2010ல் மம்முட்டி, பிரித்விராஜ் இருவரும் இணைந்து நடித்த போக்கிரி ராஜா என்கிற படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார் வைசாக். அந்த வகையில் 12 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.