தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' |
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் அண்மையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகினர். இதுகுறித்து சோஷியல் மீடியாக்களில் பலவித விவாதங்கள் எழுந்துள்ளது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்தது. ஆனால் அது உரிய சட்டமுறை விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என விசாரணை கமிஷன் அளவுக்கு இந்த விஷயம் பேசு பொருளாகி உள்ளது. நயன்தாராவுக்கு ஆதரவாக பலரும் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக நடிகை வனிதா சமீபத்தில் ‛‛பெற்றோர்களுக்கு தங்கள் அழகான குழந்தைகளின் பிறப்பை விட அழகான தருணம் என்ன இருக்க முடியும். ஒருவர் வாழ்க்கையின் மகிழ்வான தருணங்களை கெடுப்பவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். லீகல் தெரியும், மருத்துவம் தெரியுமென்று சில கோமாளிகள் பேட்டி கொடுப்பதும், ட்வீட் போடுவதும் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா?'' என பதிவிட்டிருந்தார்.
அவரை போலவே நடிகை ரேஷ்மா பசுபலேட்டியும், 'இந்த உலகில் அடுத்தவர்களின் சந்தோஷத்தை பார்த்து சந்தோஷப்படுவபர்கள் இல்லாமல் போய்விட்டனர். குற்றம் சொல்வது, யூகித்துக் கொள்வது, அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி இன்பமடைவது இதுதான் தற்போது இந்த கொடூர உலகில் நடந்து கொண்டிருக்கிறது' என பதிவிட்டுள்ளார்.