ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பிக்பாஸ் சீசன் 6 டிஆர்பி ரேட்டிங்கை அள்ளி வருகிறது. மற்ற சீசன்களில் எல்லாம் போகபோகத்தான் போட்டியாளர்களிடையே சண்டை வரும். ஆனால், இந்த சீசனிலோ முதல் நாளில் இருந்தே எவிக்ஷன் நாமினேஷன், சண்டை, அழுகை என சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இம்முறை பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஜி.பி. முத்துவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், அவரை முதல் நாளிலிருந்தே டார்கெட் செய்து வருகிறார் தனலெட்சுமி. ஜி.பி. முத்து, ஆயிஷா, தனலெட்சுமி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதத்தில் தனலெட்சுமி ஜி.பி. முத்துவை 'ஓவரா நடிக்காதீங்க' என்று திட்டினார். இதனால், சோகமடைந்த ஜி.பி. முத்துவை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். அதுமட்டுமில்லாமல் கேமரா முன் நின்ற பேசிய தனலெட்சுமி 'ஜி.பி.முத்துவை பார்த்தாலே இரிட்டேட்டிங்கா இருக்கு' என்று தன் வன்மத்தை கக்கியுள்ளார். இதை பார்த்து கடுப்பான ரசிகர்கள் தனலெட்சுமியை இந்த சீசனின் விஷக்கிருமி என்று திட்டி வருகின்றனர். மேலும், அவரை கிண்டலடித்து பல மீம்ஸ்களும் இணையத்தில் வலம் வருகின்றன.




