அதிக சம்பளம் என்றால் வில்லனாக நடிப்பாரா கமல்ஹாசன்? | ஆர்ஆர்ஆர் பட காட்சிகளை இயக்க பாலிவுட் இயக்குனரை அழைத்த ராம்சரண் | தம்பியின் அறிமுக படத்திற்கு எதிராக களம் இறங்கிய ராணா | பிரேமம் வாய்ப்பு கைநழுவிப்போய் பஹத் பாசில் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அஞ்சனா ஜெயபிரகாஷ் | பஸ் விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு | மரகதமணியின் பாராட்டு மழையில் நனைந்த ஜஸ்டின் பிரபாகரன் | சமந்தா வெளியிட்ட தல கீழ் புகைப்படத்துக்கு 9 லட்சத்துக்கு அதிகமான லைக்குகள் | ‛ரெஜினா' பட விழா : மேடையில் பாட்டுபாடி, நடனமாடி அசத்திய சுனைனா | மார்கழி திங்கள் படப்பிடிப்பில் விபத்து: தப்பிய லைட்மேன்! | அனுஷ்கா படத்திற்காக தனுஷ் பாடிய பாடல் வெளியீடு |
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி பல பேசுபொருட்களை உருவாக்கியுள்ளது. அதில், ஒன்று ராஜராஜ சோழன் எந்த மதம் என்ற ஆராய்ச்சி தான். இன்றைய நாளில் சமூகவலைதளங்கள் அனைத்திலும் ராஜராஜ சோழன் சமணராமே? இல்லை புத்தரின் மறுபிறவி என கிண்டலாக பலரும் பதிவிடும் அளவுக்கு செய்துவிட்டார் இயக்குநர் வெற்றிமாறன்.
அண்மையில் நடைபெற்ற சினிமா விழாவில் ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், 'வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது போல், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது போல் பல அடையாளங்கள் நம்மிடம் இருந்து எடுத்து கொள்ளப்படுகின்றன. இது சினிமாவிலும் நடந்து வருகிறது' என பேசியிருந்தார். அவர் பேசியதை நடிகர் கமல்ஹாசனும் ஆமோதித்து பேசியிருந்தார். திரைபிரபலங்கள் இருவரின் இந்த பேச்சு சோஷியல் மீடியாவில் வைரலான நிலையில் பலரும் இந்த கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கிளம்பியுள்ளனர்.
இதற்கிடையில் பிரபல சீரியல் நடிகரான ராகவ், வெற்றிமாறனின் இந்த கருத்துக்கு பதிலடியாக, 'ராஜராஜ சோழன் ஒரு இந்து கிடையாது. ஏனெனில் அந்த காலக்கட்டத்தில் அந்த மதமே கிடையாது என்று சொல்வது எப்படி இருக்கிறது என்றால். பாரதியார், மகாத்மா யாரும் இந்தியர்களே கிடையாது. அவர்கள் எல்லாம் பிரிட்டிஷ் அரசின் குடிமகன்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் பிறந்தபோது இந்தியா என்ற நாடே கிடையாது என்று சொல்வது போல் உள்ளது' என்று கூறியுள்ளார். ராகவின் இந்த கருத்துக்கு தற்போது ஆதரவுகள் குவிந்துவரும் நிலையில் டிரெண்டிங்கில் இடம்பிடித்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.