பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2013-ல் வெளியான கடல் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அடியே என்கிற பாடலை பாடி பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம். அதைத்தொடர்ந்து மறுவார்த்தை பேசாதே, உன் கூடவே பிறக்கணும் என்பது போன்று ரசிகர்களின் மனம் உருகக்கூடிய பாடல்களை தனித்துவமான குரலால் பாடி கவர்ந்த சித் ஸ்ரீராம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். வானம் கொட்டட்டும் என்கிற படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இந்த நிலையில் முதன்முறையாக மராத்திய படம் ஒன்றில் பாடல் பாடியுள்ளார் ஸ்ரீராம்.
மராத்திய மொழியில் உருவாகியுள்ள ஹர ஹர மகாதேவ் என்கிற படத்தில் வாரே சிவா என்கிற பாடலை பாடியுள்ளார் சித் ஸ்ரீராம். அபிஜித் தேஷ்பாண்டே என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹிதேஷ் மோடாக் என்பவர் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 25ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. மராத்தி மட்டும் அல்லது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சித் ஸ்ரீராம் மராத்திய மொழியில் எனது அறிமுகத்திற்கு இதைவிட ஒரு அருமையான பாடல் கிடைத்திருக்காது என்ற தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.