என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
மயக்கும் குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் பாடகரும், இசையமைப்பாளருமான சித்ஸ்ரீராம். தென்னிந்திய சினிமாவில் முன்னணி பாடகராக வலம் வரும் இவர் கோவையில் நாளை(நவ., 27) பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். கோவை கொடிசியா மைதானத்தில் மாலை 6மணிக்கு நிகழ்ச்சி துவங்கி சுமார் 3மணி நேரம் நடைபெற உள்ளது. சித்ஸ்ரீராமுடன் அவரின் இசை குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியின் இடையே ரசிகர்களுடன் சித்ஸ்ரீராம் உரையாடல் இடம் பெற உள்ளது.
ஒளி மற்றும் ஒலி ஆகியவற்றின் தரம் சர்வதேச நிகழ்வுகளுக்கு சமமானதாக இருக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடியோ சிஸ்டம், லைட் சிஸ்டம் இந்த கச்சேரியில் உபயோகிக்கப்பட உள்ளது. இம்முறை மேடை அருகே ரசிகர்கள் நின்று பாடி ஆடும் 'பேன் பிட்' இடம்பெறுகிறது. சுமார் 10,000 பேர் இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அன்னபூர்ணா மசாலா இந்த நிகழ்ச்சியை வழங்குகிறது. மேலும் அருண் ஈவென்ட்ஸ், வி 2 கிரியேஷன்ஸ் மற்றும் வீ.எம்.ஆர் குரோபக்ஸ் ஆகியோருடன் தினமலர் நாளிதழும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குகிறார்கள்.
கோவை மக்களே சித்ஸ்ரீராமின் இன்னிசை மழையில் நனைய தயாரா... அப்புறமென்ன கிளம்புங்கள்... இன்னும் டிக்கெட் புக் செய்யாதவர்கள், உடனே Bookmyshow மற்றும் PayTm Insider ஆகிய தளங்களில் இந்த நிகழ்ச்சிக்குக்கான டிக்கெட்டுகள் பெறுங்கள்.