காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
'நேரம், பிரேமம்' படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அப்படத்திற்குப் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து அவர் இயக்கியுள்ள 'கோல்டு' படம் அடுத்த வாரம் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.
ஓணம் பண்டிகையின் போதே படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், இறுதிக்கட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் படத்தைத் தள்ளி வைத்திருந்தார்கள். நயன்தாரா தமிழில் நம்பர் 1 நடிகையாக இருப்பதால் படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. கேரளாவில் கால்பந்து போட்டிகளுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. பலரும் தற்போது உலகக் கால்பந்து போட்டிகளில் பிஸியாக இருப்பதால் மலையாள ரசிகர்கள் இந்தப் படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பைக் கொடுக்கப் போகிறார்கள் என்பது படம் வெளியானால்தான் தெரியும்.