கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
நடிகர்கள் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள், சினிமா வாழ வேண்டும் என்றால் அவர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தயாரிப்பாளர்களிடையே நிலவுகிறது. இந்த நிலையில் அதிகபட்டம் 25 வரிகளை கொண்ட பாடல் எழுதுவதற்கு பாடலாசிரியர்கள் லட்சக் கணக்கில் சம்பளம் பெறுவது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அரகன் என்ற படத்திற்கு சினேகன் ஒரு பாடல் எழுதி உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது: இந்த படத்தின் இயக்குனர் அருண்குமார் என்னை பாடல் எழுத அணுகியபோது, படத்தின் பட்ஜெட் குறித்து பேசி எப்படியாவது என்னை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என முயற்சித்தார்.
என்னை பொறுத்தவரை ஐநூறு ரூபாய்க்கு பாட்டு எழுதிய போதும் சரி, தற்போது மூன்று லட்ச ரூபாய்க்கு பாட்டு எழுதும்போதும் சரி, சினிமாவுக்குத்தான் பாட்டு எழுதி வருகிறேனே தவிர, நடிகர்களுக்காகவோ பணத்துக்காகவோ பாட்டு எழுத வரவில்லை. பத்து படங்களில் மூன்று படங்களுக்கு பணம் வாங்காமல் தான் பாட்டு எழுதி தருகிறேன். என்றார்.
“சினேகனே 3 லட்சம் சம்பளம் வாங்கினால் முன்னணியில் இருக்கிற பாடலாசிரியகர்கள் எத்தனை லட்சம் வாங்குவார்கள் என்று தெரியவில்லை. இதற்கிடையில் இப்போதெல்லாம் எந்த பாட்டின் வரிகளும் மக்கள் மனதில் நிற்பதில்லை. இசை நன்றாக இருந்தால் சில மாதங்கள் வரை இளைஞர்கள் அதனை கொண்டாடுவார்கள். பின்னர் மறந்து விடுவார்கள்” என்கிறார்கள் சினிமா பார்வையாளர்கள்.