சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே விரைவில் வெளிநாடு சென்று காஸ்மெட்டிக் சர்ஜரி செய்து கொள்ளப் போவதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.
அவர் கூறுகையில், சமீப காலமாக முன்னணி நடிகர்- நடிகைகள் குறித்த ஆதாரமற்ற வதந்திகள் பரவி வருகிறது. காஸ்மெட்டிக் சர்ஜரி செய்ய வெளிநாட்டிற்கு நான் செல்லப்போவதாக ஒரு வதந்தி வைரலாகி வருகிறது. தற்போது நான் ஐதராபாத்தில் இருக்கிறேன். ஒரு மாத விடுமுறையில் வெளிநாடு சென்று விட்டு திரும்பி வந்து அடுத்தபடியாக திரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். மற்றபடி எனது உடம்பில் எந்த பகுதியிலும் அறுவை சிகிச்சை செய்யவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அதனால் இதுபோன்ற வதந்திகளை எனது அபிமானிகள் யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார் பூஜா ஹெக்டே.