சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சினிமாவில் ஏழை மக்களுக் ஓடி, ஓடி உதவி செய்கிறவர் என்.டி.பாலகிருஷ்ணா. ஏழை மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பறந்து பறந்து அடித்து வில்லன்களை துவம்சம் செய்கிறவர். ஆனால் சொந்த வாழ்க்கையில் தன்னை எம்.எல்.ஏ ஆக்கிய மக்களை அவர் திரும்பிக்கூட பார்ப்பதில்லையாம். தொகுதி பக்கம் தலைவைத்துகூட படுப்பதில்லையாம். இப்படி அவர் தொகுதி மக்களே போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இந்துபுரம் தொகுதியில் ஏற்கனவே சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பாலகிருஷ்ணா, சமீபத்தில் நடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டு முறை இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
இந்த நிலையில்தான் பாலகிருஷ்ணா மீது போலீசில் தொகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் ''இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதியை கண்டுகொள்வது இல்லை. தொகுதியில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இது எதிர்கட்சிகளின் சதி என்று பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள்.