பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
சினிமா பாடலாசிரியரான சினேகனுக்கும் சின்னத்திரை நடிகை ஜெயலெட்சுமிக்கும் இடையே சமீபத்தில் சினேகம் அறக்கட்டளை தொடர்பான விவகாரத்தில் பிரச்னை எழுந்தது. இதனையடுத்து அறக்கட்டளையின் மூலம் பணம் மோசடி செய்ததாக கூறி ஜெயலெட்சுமி மீது சினேகன் புகார் கொடுத்தார். பதிலுக்கு அது பொய்யான குற்றச்சாட்டு என ஜெயலெட்சுமியும் புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸார் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலெட்சுமி சினேகன் மீது எப்ஐஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். அப்போது, 'சினேகம் அறக்கட்டளை மூலம் பணமோசடி செய்ததாக சினேகன் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவர் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார். மேலும், இது தொடர்பில் அவர் என்னிடம் பேச வந்தபோது அவரை நான் தனிமையில் காபி சாப்பிட அழைத்ததாகவும் பொய் கூறி வருகிறார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே, நீதி வேண்டி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். தற்போது என் மீது பொய் புகார் அளித்ததற்காகவும், அவதூறாக பேசியதற்காகவும் சினேகன் மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சமூகவலைத்தளத்தில் என்னை பற்றி அவதூறாக பேசி வரும் அனைவருக்கும் பொருந்தும்' என்றும் ஜெயலெட்சுமி கூறியுள்ளார்.