சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தற்போது விஜய் வம்சி பைடிபள்ளி இயக்கி வரும் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள எண்ணூரில் பிரமாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது. விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது என்ற தகவலை அறிந்ததும் அவரது ரசிகர்கள் அங்கு படையெடுக்கத் தொடங்கி விட்டார்கள்.
ஒவ்வொரு நாளும் ரசிகர்களின் படையெடுப்பு அதிகரித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று அங்கு கூடிய விஜய் ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டி அடித்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தினால் விஜய் ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் கொந்தளிப்படைந்துள்ளார்கள். இதையடுத்து அவர்கள் சோசியல் மீடியாவில் விஜய்க்கு எதிராக சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள்.
அதில், ரஜினி அஜித், சூர்யா போன்ற நடிகர்கள் எல்லாம் ரசிகர்கள் கூடிவிட்டால் தூரத்தில் நின்றாவது அவர்களைப் பார்த்து கையை அசைத்து சந்தோஷப்படுத்துகிறார்கள். ஆனால் விஜய்யோ நாங்கள் அவரை பார்ப்பதற்காக நீண்ட தூரத்தில் இருந்து வந்து காத்து கிடந்த போதும் தூரத்தில் நின்று கூட எங்களை பார்த்து அவர் கை அசைக்கவில்லை. அப்படி இருக்கும்போது எதற்காக விஜய் படம் வெளியாகும் போது அவருக்கு கட்அவுட் , பேனர் வைத்து நாங்கள் ஆதரவு காட்ட வேண்டும். படக்குழுவினரின் உத்தரவு இல்லாமல் காவல்துறையினர் எங்களை விரட்டி அடிப்பார்களா ? ரசிகனின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத விஜய்யை இனிமேல் நாங்கள் பார்க்க சொல்ல மாட்டோம். தளபதி எங்களுக்கு நல்ல பரிசு கொடுத்து விட்டார் என்று பல ரசிகர்களும் சோசியல் மீடியாவில் ஏராளமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.