அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? | வா வாத்தியாருக்கு யு/ஏ சான்றிதழ்: ஆனாலும் பதைபதைப்பில் படக்குழு | இன்று ‛சேது' படத்துக்கு வயது 26 | தெலுங்கில் 'வா வாத்தியார்' படத்திற்கு வந்த சோதனை | வசூலைக் குவிக்கும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | டிசம்பர் 19ல் ‛கொம்புசீவி' ரிலீஸ்: இதிலாவது ஜெயிப்பாரா விஜயகாந்த் மகன்? | தடை நீங்கியது : டிசம்பர் 12ல் 'அகண்டா 2' ரிலீஸ் அறிவிப்பு |

சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்ததால், அப்படத்தின் இயக்குனர் கவுதம் மேனனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பைக் ஒன்றை பரிசாக கொடுத்தார் . நடிகர் சிம்புவுக்கு டொயோட்டா காரை பரிசளித்தார். இந்நிலையில் இவர்களை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு பட வெற்றிக்காக கூல் சுரேசுக்கு விலை உயர்ந்த போன் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் ஐசரி கணேஷ். இந்த படத்தை சிம்பு, கவுதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் கூட இந்தளவுக்கு புரொமோஷன் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் நடிகர் கூல் சுரேஷ் தான் செல்லும் இடமெல்லாம் வெந்து தணிந்தது காடு பற்றி தொடர்ந்து புகழ்ந்து வந்தார். குறிப்பாக வெந்தது தணிந்தது காடு என சிம்புவுக்கு வணக்கத்த போடு என்பது போன்று கூறி இடத்திற்கு தகுந்தபடி படத்தை புரொமோஷன் செய்தார். இதன் வெளிப்பாடகவே இந்த போனை அவருக்கு பரிசாக அளித்துள்ளனர்.