ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் வெந்து தணிந்தது காடு. இந்தப் படம் நல்ல வசூல் கொடுத்து வருவதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றால் கண்டிப்பாக இரண்டாவது பாகம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார் கவும் மேனன். இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஐசரி கணேசனும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்ற போது, வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டது. இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்து இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இறங்கி விட்டதாகவும், அந்த பணிகள் முடிவடைந்ததும் படப்பிடிப்பை தொடங்க தயாராக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். அதனால் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் தொடங்குவது உறுதியாகிவிட்டது. மேலும், வெந்து தணிந்தது காடு திரைக்கு வந்து நான்கு நாட்களில் 50 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.